இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து திரும்பவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூலை 14 அன்று தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதிக்கு சிங்கப்பூர் 14 நாள் குறுகிய கால பயண அனுமதியை வழங்கியுள்ளது. ஆக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.