Date:

வருமான வரி அனுமதி பத்திர இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

வருமான வரி அனுமதிப் பத்திரத்திர இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக்கும் முறைமை  எதிர்வரும்  29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், chassi இலக்கம் கொண்ட வாகனங்களை பதிவு செய்வதற்கு இயலாதவர்கள் எதிர்வரும்  29 ஆம் திகதி முதல்  வருமான வரி வருமான வரி அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

49 CC மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துபவர்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவினை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், விவசாய உபகரணங்கள், மின் பிறப்பாக்கிகள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் வாராந்த எரிபொருள் தேவையினை பூர்த்தி செய்வதற்கு  பிரதேச  செயலகங்களில் பதிவு செய்வதுடன், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான நிரப்பு நிலையத்தினை பரிந்துரைக்குமாறும்  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட Sipetco மற்றும் Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...