நாளாந்தம் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததன் காரணமாகவே QR Code முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணியில் உள்ள சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கவில்லையெனவும், எரிபொருள் கையிருப்பில் உள்ளபோது நாளாந்தம் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.