Date:

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் COVID – 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி  இன்று ஊடகங்களுக்கு க்ருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக கடைபிடிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு   அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைபிடுத்தல், அவசியமற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தம் மற்றும் ஒன்று கூடல்களை கட்டுப்படுத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது ஒமிக்ரோன் வைரஸின் திருபாக கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலே காணப்படுவதாகவும், சுகாதார வழிமுறைகள் முறைகளை உரிய முறையில் கடைபிடிக்குமாறும் சுகாதார அமைச்சின் COVID – 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...