ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ-அத்திட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 855 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 37 வயதான ஆண் ஒருவரும் 35 வயதான பெண்ணொருவரும் கைதாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்றும், கைதான ஆண், தெஹிவளை-கல்கிஸ்ஸ மாநகர சபையின் தொழிலாளர் ஒருவரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.