நாடு முழுவதும் உள்ள 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR Code முறைமை 4,708 வாகனங்களுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேலும், இன்றும் 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது சோதனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு, விநியோகத்தில் தாமதம் காரணமாக சோதனை செய்யப்படாத 5 எரிபொருள் நிலையங்களில் அடுத்த 2 நாட்களில் குறித்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.