கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (23) 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது கொழும்பின் 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளிலேயே ஜூலை 23 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
நீர் குழாய் அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.