முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறி சிங்கப்பூரில் தங்கியுள்ளார்
அவர் மாலைதீவிலிருந்து கடந்த 14ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற போது, அவருக்கு 14 நாட்களுக்கான தற்காலிக வீசாவே வழங்கப்பட்டது.
எனினும் இலங்கையர் ஒருவர் சாதாரணமாக சிங்கப்பூர் செல்லும் போது, அவருக்கு 30 நாட்கள் வீசா வழங்கப்படுவதுடன், பின்பு நீடிக்கலாம்.
கோட்டாவுக்கு 14 நாட்கள் மட்டுமே வீசா வழங்கப்பட்டிருப்பதுடன், அதற்கு பிறகு அவர் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கோட்டாவும் அவர் மனைவியும் சிங்கப்பூரில் இருந்து உகண்டாவுக்கு செல்லக்கூடும் என ஊகங்கள் வெளியிடப்படுகின்றன.