எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்களைக் குறைக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்கவில்லை என சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்தார்.
ஜூலை 21ஆம் திகதி முதல் எரிபொருள் அனுமதிச் சீட்டின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு முன்னர் ஒரு தடவையாவது பாடசாலை வாகனங்களுக்கு டீசல் வழங்கப்பட வேண்டுமெனவும் டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னைய விலை உயர்வுகளுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் விலையில் சிறிதளவு குறைப்பு மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை தவணை இன்னும் தொடங்கவில்லை என்றாலும் பாடசாலை வேன் கட்டணத்தைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 21ஆம் திகதி புதிய பாடசாலைக் கல்விக் காலம் ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், இதுவரை டீசலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.