பாடசாலைகளில் மதிய உணவு திட்டத்தினை முன்கொண்டு செல்வதற்கு சீனா 10 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியினை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வறுமை மற்றும் போஷாக்கு குறைபாடு ஆகியவற்றினை கருத்திற் கொண்டு பாடசாலை உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலான பாடசாலைகள் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு வேளை உணவுக்காக ஒதுக்கப்பட்ட 30 ரூபா தொகையானது தற்போது 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பாடசாலை உணவுத் திட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் நாட்டுக்கு நன்கொடையாக பெறப்படும் அரிசித் தொகையும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.