Date:

ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்று

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று(19) வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

பாராளுமன்றம் இன்று(19) காலை 10 மணிக்கு கூடவுள்ளதுடன், வேட்புமனுத் தாக்கலும் இதன்போது இடம்பெறவுள்ளது.

வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் தெரிவத்தாட்சி அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் செயற்படவுள்ளார்.

இதேவேளை, வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கு இடையில் கொழும்பில் நேற்றிரவு(18) சந்திப்பொன்று இடம்பெற்றது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி தெரிவுக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...