Date:

மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க காலி தொழில்நுட்பக் கல்லூரியுடன் கைகோர்க்கும் எயார்டெல் லங்கா

இலங்கையின் இளைஞர்களை மையமாகக் கொண்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel Lanka, புதிய தலைமுறை தொழில்நுட்பவியலாளர்களின் தொழில்நுட்ப மற்றும் தனிப்பட்ட திறன்கள் பற்றிய அறிவை மேம்படுத்தி நிபுணத்துவமுடையவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அண்மையில் காலி தொழில்நுட்பக் கல்லூரியுடன் (COT, Galle) கைகோர்த்துள்ளது.

இவ்வாறு கூட்டிணைந்ததன் மூலம், Airtel Lankaஆனது COT, காலியிலுள்ள கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட தொகுதிகளைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதுடன் அவர்களுக்கு புதிய கணினிகள் மற்றும் உபகரணங்களையும் வழங்கவுள்ளது. சிறந்த மற்றும் திறமையான இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 6-12 மாதங்கள் வரை ஊதியத்துடன் கூடிய Internship திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

“உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போலவே, இலங்கையும் மோசமான பொருளாதார நிச்சயமற்ற காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை வெளிக்கொணருவதற்கும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணங்கள் இதுவாகும். இந்த நிலைமையில் இருந்து மீட்பதற்கு ஊக்குவிப்பதில் ICT மற்றும் தொலைத்தொடர்பு துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.” என எயார்டெல் லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர்ரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷிஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

அஷிஷ் மேலும் தெரிவிக்கையில், “வெற்றிப்பெற, இலங்கையின் இளம் வயதினரைப் பயிற்றுவித்து, இந்தத் துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குவதற்குத் தேவையான அறிவுத் திறன் மற்றும் கருவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். இது இலங்கை முழுவதும் துரிதமான, பரவலாக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி, வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும். காலி தொழில்நுட்பக் கல்லூரியுடன் எங்களின் கூட்டு இந்த முக்கியமான பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.” என கூறினார்.

Huawei போன்ற மூலோபாய வணிக பங்குதாரர்களுடன் எயார்டெல்லின் தற்போதைய உறவுகளை மேம்படுத்துவதன் மூலம், தரவுத் தொடர்பு, மைக்ரோவேவ் நிறுவல் மற்றும் வடிவமைப்பு மற்றும் BSS நெட்வொர்க்குகள் ஆகியவற்றில் மாணவர்களுக்கு நேரடி/தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கப்படும். மேலும், காலி COT பட்டதாரிகள், Airtel பொறியாளர்களின் வாழ்க்கைப் பாதை, தனிப்பட்ட பிராண்டை உருவாக்குதல், தனிப்பட்ட திறன்கள் பயிற்சி மற்றும் பெருநிறுவனத் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகள் பற்றிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவார்கள். தொலைத்தொடர்பு சேவைத் துறையின் முக்கியமான செயல்பாட்டு அம்சங்களில் நேர்முகத் தேர்வு மற்றும் நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கான நடைமுறை ஆலோசனைகளைப் பெற மாளிகாவத்தையில் உள்ள Airtel Mobile Switching Centre (MSC)க்கு வருகை தரும் வாய்ப்புகளும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373