பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் காத்திருக்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
வரிசையில் காத்திருக்கும் மக்கள் வெளியேறியதன் பின்னரே பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும் திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் ஒவ்வொரு வாகனத்திற்கும் வாரத்திற்கு போதுமான எரிபொருள் வழங்கப்படும் எனவும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.