Date:

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை

நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில் இடம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே மாவட்ட செயலகங்களில் இருந்து கடவுச்சீட்டுகளை இணையத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில்  இவ்வாறு உப அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...