நிலவும் உலகளாவிய பொருளாதார நிலைமைக்கு மத்தியில், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் நிலைமைக்கு இலங்கையை உதாரணமாகக் கொள்ளலாம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜி-20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் உரையாற்றியபோது, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் யுத்தத்துடன், உலகில் உணவுகள் மற்றும் பொருட்களின் விலைகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக, கொள்கை ரீதியான தலையீடுகள் அவசியமாகும்.
இந்த நிலைமைக்கு இலங்கையை ஓர் அடையாளமாக அவதானிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.