Date:

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள போதிலும் கட்சி எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் வேட்பு மனுக்கள் கோரப்படும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தானும் வேட்புமனு அளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...