Date:

ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி   கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகல் கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியில் இருந்து விலகியதாக கருதி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த  யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்  ஜனாதிபதியின்  பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதேவேளை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தமது பதவி விலகல் கடிதத்தை நேற்றைய தினத்திற்குள் அனுப்பிவைப்பதாக  தொலை பேசி ஊடாக தமக்கு அறிவித்ததாகவும்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்

அத்துடன் தாம் இந்த சந்தர்ப்பத்தில்   பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ தொடர்ந்தும் மாலைதீவு மாலே நகரில் தங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன

இந்த நிலையில்   ஜனாதிபதியின்  பதவி விலகல் கடிதம் இதுவரை கிடைக்கப்பெறபதுள்ள நிலையில் நாளைய தினம்  நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக  நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...