ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினத்திற்குள் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளார்.
சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் மகிந்த யாபா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.