தற்போது பல ஹெலிகாப்டர்கள் கொழும்பில் பல பகுதிகளில் வலம் வருவதாக மைதானத்தில் உள்ள போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்ட இடத்திற்கு அருகில் இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
கொழும்பு 07, உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சில ஹெலிகொப்டர்கள் பறப்பதையும் காணமுடிந்தது.
ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகக் கோரி அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஒன்று கூடியுள்ளனர்.