ஜனாதிபதி, முதற் பெண்மணி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாலத்தீவு செல்வதற்கு அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே , விமானம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையினை மேற்கோள்காட்டி வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு சுங்கம் மற்றும் ஏனைய சகல சட்டங்களுக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் பூரண அனுமதியுடன் குறித்த விமானம் புறப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.