ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் தி இந்து பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, தி இந்து பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் K.A.A.S.கணுகல குறிப்பிட்டார்.