கொழும்பு, கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக் செட்டியார் தெருவின் ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.