நாட்டின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
மதியம் 2 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவுடன் புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
ஜூலை 13ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஜனாதிபதி சபாநாயகரிடம் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்காக பாராளுமன்றம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கூடும் அதேவேளை சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.