இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை செய்தி சேகரிக்கும் தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு 07 இல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் வைத்து ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர்கள் என்பதை அறிந்தும் தாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தும் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் பெரும் குழுவொன்று ஊடகவியலாளர்களை சுற்றி வளைத்து பொல்லுகளால் தாக்கினர்.
இந்த சம்பவத்தில் நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.