இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் இன்று மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.