சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அதிகபட்சமாக 30 நாட்களுக்கு ஜனாதிபதியாக செயல்பட பெரும்பான்மை கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
இடைக்கால சர்வகட்சி ஆட்சியை நியமித்து விரைவில் தேர்தலை நடத்துங்கள் எனவும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.