Date:

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி மாத்தளையிலும் போராட்டம் (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக மாத்தளை மாவட்டத்தின் கந்தேனுவரை பிரதேசத்திலும் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விழித்தெழு தோழா அமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்க ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் தம்பலகல, சின்ன செல்வகந்த, பெரிய செல்வகந்த, பிட்டகந்த, கந்தேனுவர மற்றும் உனுகலை கிராமங்கசை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டிந்தனர்.

இதன்போது, ஹிசாலினிக்கு நேர்மையான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்தோடு, இலங்கையில் இனிவரும் காலங்களில் இவ்வாறு சிறுமிகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழப்புகள் 390 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

தெல்தோட்டைக்கு வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் உலர் உணவுப் பொருட்கள்!

இன்று ஜனாதிபதி மற்றும் மாகான ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெல்தோட்டை பற்றி...

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...