எரிபொருள் வழங்குவது தொடர்பாக சுகாதார ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாளை இரத்து செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விநியோகிக்கும் திகதி தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.