தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம அலுவலர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல சீலமனாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்று (07) முதல் பணி நிலையங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதுல சீலமனாராச்சி குறிப்பிடுகின்றார்.