Date:

அத்தியாவசியமின்றி இலங்கை செல்ல வேண்டாம்-பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து அறிவிப்பு

அத்தியாவசிய விடயங்களை தவிர இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள்  தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.

நேற்று (05)  புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைக்கு அமைய இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் மருந்து, எரிவாயு, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறையால் வணிகம், அவசரநிலை மற்றும் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று பிரித்தானிய வெளிநாட்டு பொதுநலவாய அலுவலகம் மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து தூதரகம் ஆகியவை தமது பிரஜைகளிடம் அறிவித்துள்ளன.

நாளாந்தம் மின் தடைப்படுவதன் காரணமாக வன்முறை, அமைதியின்மை மற்றும் போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது.

வீதி மறியல்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மிகக் குறுகிய காலத்தில் நடக்கலாம் என்று குறித்த நாடுகள் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஸ்லிம் தாதியர் ஆடை விவகாரம்

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்...

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்

பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின்...

பாதாள அரசியல்வாதிகள் யார்? விரைவில்…

பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள  மற்றும்  தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர்...

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை...