Date:

எரிவாயுவுக்கு இனி தட்டுப்பாடு இல்லை

கொழும்பில் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 9ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளதாகவும், இதனையடுத்து 11ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோ எடையுள்ள ஒரு இலட்சத்து 40,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து நாளாந்தம் மொத்தமாக 25,000 கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...

மதுபான வரி தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவிப்பு

மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்தும் காலக்கெடு மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கான...

தங்கத்தின் விலையில் எதிர்பாராத பாரிய மாற்றம்

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (28) தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது. அதன்படி,...