இலங்கைக்கு வருகை தரவிருந்த உரக்கப்பல் வருகை தருவதற்கு தாமதம் ஏற்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஓமானிடமிருந்து இந்திய அரசாங்கத்தின் வாயிலாக 40 ஆயிரம் மெற்றிக்டொன் உரம் அடங்கிய கப்பல் நேற்றைய தினம் நாட்டிற்கு வருகைதரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த கப்பல் வருகை தருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கப்பல் எதிர்வரும் 09 ஆம் திகதி நாட்டின் கடற்பரப்பினை வந்தடையும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய நிதியுதவியின் கீழ் 65 ஆயிரம் மெட்றிக் டொன் உரமும் விரைவில் கிடைகப்பெறும் எனவும் அமைச்சர் மகிந்த அமவீர மேலும் தெரிவித்தார்.