எதிர்வரும் சில வாரங்களில் எரிபொருள் தாங்கிய 7 கப்பல்கள் நாட்டினை வந்தடையவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்துரைக்கையிலேயே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 08 ஆம் அல்லது 09 ஆம் திகதிகளில் 40 ஆயிரம் மெட்றிக்டொன் அடங்கிய டீசல் கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அத்துடன் எதிர்வரும் 13 முதல் 15 ஆம் திகதி வரையிலாக காலப்பகுதியில் பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி கச்சா எண்ணெய் அடங்கிய கப்பல் ஒன்றும் டீசல் அடங்கிய கப்பல் ஒன்றும், லங்கா ஐ ஓ சி நிறுவனத்திற்கு டீசல் கப்பல் ஒன்றும் வருகைதரவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டிற்கு இன்றைய தினம் வருகை தரவிருந்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்குரிய 3 ஆயிரத்து 700 மெட்றிக் டொன் அடங்கிய கப்பல் கடற்பரப்பில் நிலவியுள்ள சீரற்ற காலநிலை எதிர்ரும் 09 ஆம் திகதியே நாட்டிற்கு வருகை தரும் லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.