வெல்லவாய நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு(05) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த எரிபொருள் தீர்ந்துபோய்விட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிலர் போத்தல் மற்றும் கற்களை வீசி தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் 20 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.