தாக்குதலுக்கு உள்ளானமையினாலேயே கந்தகாடு புனர்வாழ்வு மைய கைதியின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் உயிரிழந்த கைதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் மூலம் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதற்கமைய மழுங்கிய ஆயுதங்களின் மூலம் உடல் முழுவதும் தாக்கப்பட்ட காயங்களால் ஏற்பட்ட சிக்கல்களின் விளைவாக உருவான காயங்களினால் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.