தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தென் பகுதிகளில், வெளிநாட்டு உளவுச்சேவைகளின் பங்களிப்புடன் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
எனினும், இந்த தாக்குதல்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக கூறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு – கிழக்கில் பணியாற்றும் வெளிநாடுகளின் அலுவலர்கள் குறித்த தினங்களில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் பிரதேச அரசியல்வாதிகளின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
குறித்த தகவலில் உண்மையிருக்கிறதா என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபையில் கேள்வி எழுப்பினார். எனினும் இதனை பாதுகாப்பு தரப்பு உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று பிரதி சபாநாயகர் பதில் வழங்கினார்.