உணவு, எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிகள் காரணமாக வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்கிவரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
இதன்படி, நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாதம் முதல் 7500 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்படும் நன்கொடைகளால் இவ்வாறு உதவித்தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் (WB) 200 மில்லியன் டொலர்களில் ஒரு பகுதியும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 200 மில்லியன் டொலர்களில் ஒரு பகுதியும் இதற்காக ஒதுக்கப்பட உள்ளது.
சமுர்த்தி பயனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவ ரீதியான உதவிகள் தேவைப்படுவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.