முன்னாள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இன்று பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து மேர்வின் சில்வா அவர்களிடமிருந்தே கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாவட்ட அமைப்பாளராக மேர்வின் சில்வா எதிர்வரும் காலங்களில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேர்வின் சில்வா கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) கீழ் போட்டியிட்டார்.