எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவற்றின் தாக்கம் இருந்தாலும், உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மொத்த வியாபாரிகளுக்கு தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் ரூபா 550க்கு வழங்கப்படுவதாக சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.
நுகர்வோரை பாதுகாப்பதற்காக தொழில் துறையில் பல சவால்கள் ஏற்பட்ட போதிலும் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.