புகையிரத ஊழியர்கள் பணிக்கு வருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அலுவலக புகையிரதங்கள் உள்ளிட்ட 22 புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் பிரச்சினையால் இவ்வாறு புகையிரத ஊழியர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு சமூகமளிக்க முடியாதுள்ளதாக புகையிரத கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.