இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு, தமது விஜயத்தை இன்றுடன் நிறைவு செய்கின்றது.
கடந்த 10 நாட்களாக இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை இந்த குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இந்த பேச்சுவார்த்தைகள் வினைத்திறனானதாக அமைந்திருந்தது என சர்வதேச நாணய நிதிய பணிக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியை வழங்கும் முகமான பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில், இணைய வழியில் இந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.