பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கடவத்தை-கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்த 59 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.