எரிபொருட்களின் விலை அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் 30 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது
குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 40 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.