Date:

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது (நாணயச் சபை) ஐந்து (5) முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்காக அதாவது இக்கம்பனிகளின் உரிமங்கள் ஒன்றில் இரத்துச்செய்யப்பட்டுள்ள அன்றில் இடைநிறுத்தப்படடுள்ள சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், ஈரிஐ பினான்ஸ் லிமிடெட், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மற்றும் த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் என்பவற்றுக்கான சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரீட்சிப்பதற்கு 2021 ஒத்தோபரில் முறிவடைந்த நிதிக் கம்பனிகளை புத்துயிரளிப்பதற்கான ஆலோசனைக் குழு (குழு) ஒன்றினைத் தாபித்தது. மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்காகவும் சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரிந்துரைக்கும் அல்லது அத்தகைய புத்துயிரளித்தல் தெரிவுகள் சாத்தியமற்றுக் காணப்படுமாயின் தீர்த்துக்கட்டுவதைப் பரிந்துரைக்கும் பொறுப்பு இக்குழுவிற்கு நாணயச் சபையினால் உரித்தளிக்கப்பட்டிருந்தது.

 

மேலே குறிக்கப்பட்ட கம்பனிகளில் நான்கின் (4) புத்துயிரளித்தலுக்காக வேறுபட்ட தரப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் பின்னர் இக்குழு அதன் இறுதி அறிக்கையினை 2022.05.31 அன்று நாணயச் சபைக்குச் சமர்ப்பித்தது.

 

நாணயச் சபையானது, சொல்லப்பட்ட ஐந்து முறிவடைந்த நிதிக் கம்பனிகள் மீதுமான குழுவின் அறிக்கையினைப் பரிசீலனையிற்கொண்டு, சொல்லப்பட்ட குழுவின் பரிசீலனைக்காக கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகள் ஈடேறக்கூடியவையல்ல என்றும் பல எண்ணிக்கையான கொள்கை மற்றும் சட்ட ரீதியான உள்ளார்ந்தங்களை கொண்டுள்ளதால் ஏற்கனவே காணப்படுகின்ற ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினுள் பணியாற்றத்தக்கவையாக இவை தோன்றவில்லை என்றும் அவதானத்தில் கொண்டது. மேலும், தற்போதைய பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொள்கையில் முதலீட்டாளர்களாக வரக்கூடியவர்களிடமிருந்து ஏதேனும் ஈடேறக்கூடிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெறுமென சொல்லப்பட்ட குழு எதிர்பார்க்கவில்லை. இச்சூழ்நிலைகளின் கீழ் முறிவடைந்த ஐந்து (5) நிதிக் கம்பனிகள் தொடர்பிலுமான ஒரேயொரு தெரிவு, தீர்த்துக்கட்டுதல் நடவடிக்கைமுறைகளை/தீர்த்துக்கட்டுவதற்கான கோவைப்படுத்தலை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவே அமையும். மேற்குறித்தவற்றின் நோக்கில், குழுவானது அதன் அறிக்கையில் குழுவை முடிவுறுத்துவதற்குப் பரிந்துரைத்துள்ளது. குழுவின் பரிந்துரையினை அடிப்படையாகக் கொண்டு நாணயச் சபை குழுவினைக் கலைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

 

இதன் விளைவாக, மேலே குறிப்பிட்ட ஐந்து முறிவடைந்த நிதிக் கம்பனிகளையும் ஏற்புடைய சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக தீர்த்துக்கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார்...

NÜWA ஹோட்டலை அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka: அதிஉயர் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தம் ஆரம்பம்

இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு முக்கிய மைக்கல்லாக, Melco...

அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி...

மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும்...