நாடு முழுவதும் மரக்கறி சந்தைப்படுத்தல் முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அருண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம். அத்தோடு கமத்தொழில் வளர்ச்சி குறித்து அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டாது எடுக்கும் முடிவுகள் காரணமாக மரக்கறிகளை பயிரிடும் விவசாயிகள் முற்றிலும் பயிர் செய்கையில் இருந்து விலகிச் செல்வதை நிறுத்த முடியாது போகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.