Date:

எரிபொருள் வரிசைகளில் பொதுமக்களுக்கு டோக்கன்கள்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்ததன் பிரகாரம் சில பிரதேசங்களில் எரிபொருள் வரிசைகளில் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், இன்று ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் அது தொடர்பில் அறியாதவர்களாகவே உள்ளனர்.

வாகன உரிமையாளர்களின் இலக்கங்கள் பெறப்பட்டு, எரிபொருள் சரக்குகள் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு வந்தவுடன் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

நாட்டில் தற்போதுள்ள வரிசைகளை நிர்வகிப்பதற்கு மாத்திரமே டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் விஜேசேகர முன்னதாக தெரிவித்தார்.

எரிபொருள் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை ஆழப்படுத்தும் வகையில் எதிர்பார்க்கப்படும் எரிபொருள் சரக்குகள் மேலும் தாமதமாகியுள்ளன.

பொதுமக்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பல மணிநேரம், பல நாட்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...