Date:

தட்டுப்பாடு நிலவும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள புதிய முறை

தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் தொடர்பிலும் அவை விநியோகிக்கப்படும் இடம் தொடர்பிலும் தகவல்களை வழங்க புதிய முறைமை ஒன்று அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக பல அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு அரச வைத்தியசாலையிலும் தனியார் மருந்தகங்களிலும் தட்டுபாடு நிலவுகின்றன. இதன்காரணமாக, நோயாளர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியம் மற்றும் இன்னல்களை கருத்திற்கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் தொடர்பில் 045 22 75 636 என்ற இலக்கத்திற்கோ அல்லது 077 19 77 177 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்க தலைவர் சந்திக கன்கந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லாத சந்தர்ப்பத்தில் அது தொடர்பில், ஆராய்வதற்கான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுவசரிய தகவல் சேவையின் 1999 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடி யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...