நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய 27 ஆம் திகதி முதல் ஜுலை 3 ஆம் திகதி வரை இவ்வாறு மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும், பகல் வேளைகளில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், CC எனப்படும் வர்த்தக வலயங்களில் ஜுலை 2 மற்றும் 3 ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், M, N, O, X, Y மற்றும் Z ஆகிய வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.