Date:

திருகோணமலை பகுதியில் தங்க சங்கிலி கொள்ளை

திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மாங்காய் ஊற்று பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை கீழே தள்ளிவிட்டு தங்க ஆபரணத்தை பறித்துச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்து இனந்தெரியாத இருவரில் ஒருவர் தாயும், மகளும் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு தாயின் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணத்தை பறித்து விட்டுச் சென்ற நிலையில் தாயும், மகளும் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் கன்னியா மாங்காய் ஊற்று பகுதியைச் சேர்ந்த எம். சுவிஸ்மா (35 வயது) மற்றும் அவரது மகள் ஹரிஸ்டிகா (10 வயது) ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...