Date:

Alumex Lumin உற்பத்தி வலையமைப்பு 15,000ஆக அதிகரிப்பு

இலங்கையின் முன்னணி முழுமையான ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தியாளரும், Hayleys குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமுமான Alumex, Lumi, சமீபத்தில் 2,000 நிபுணர்களின் பங்களிப்புடன் 15,000 உள்நாட்டு அலுமினிய உற்பத்தியாளர்களின் வலையமைப்பை விஸ்தரித்துள்ளது.

இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட Alumex, உள்ளூர் அலுமினிய உற்பத்தியாளர்களை சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன பயிற்சி மையத்தை நிறுவியது. இலங்கையின் கைத்தொழில்துறையினரின் அறிவை மேம்படுத்துவதுடன், தொழிநுட்பக் கல்லூரி பட்டதாரிகளுக்கும் இராணுவ உற்பத்திப் பிரிவுக்கும் நிறுவனம் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது.

“Alumex எப்போதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த இலக்கை அடைய, நாடளாவிய ரீதியில் உள்ள அலுமினிய உற்பத்தியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம், அவர்களுக்கு தேவையான அறிவு மற்றும் சான்றிதழை வழங்குவதன் மூலம் முழு உள்ளூர் தொழிற்துறையின் தரத்தையும் உறுதிப்படுத்துகிறோம். இந்த நோக்கத்திற்காக, நாங்கள் ஒரு வெற்றிகரமான, சிறந்த Lumin உற்பத்தி சமூகத்தை நிறுவியுள்ளோம்.”

“தகுதியான அலுமினிய உற்பத்தியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விழிப்புணர்வு மற்றும் தகுதியான பயிற்சியை வழங்குவதற்காக இந்த வலையமைப்பை விரிவுபடுத்தினோம். Lumin உற்பத்தியாளர்களை நாங்கள் பாராட்டுகிறோம் மற்றும் ஒரு தனித்துவமான சேவையுடன் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கான அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்காக அவர்களுக்கு வெகுமதி அளிக்கிறோம்.” என Alumexஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெடிவெல தெரிவித்தார்.

நிறுவனம் ஆண்டுதோறும் 2000 உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. அதன் மூலம், அவர்கள் உலகளாவிய புத்தாக்க தரத்தில் இருக்கிறார்கள் மற்றும் வணிக ரீதியாக நிலையான வணிகத்தை நடத்திச் செல்வதற்கான நடைமுறை திறன்களை மேம்படுத்துகிறார்கள்.

மிக சமீபத்தில், Aluexஆனது பதிவு செய்யப்பட்ட Lumin நிபுணர்கள், பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்களை ஒரு தொழில் மேம்பாட்டு அமர்வு ஒன்றிற்காக ஒன்றிணைத்தது, மேலும் தடையற்ற சேவை தரத்தை உறுதி செய்வதற்கும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் பணியாற்றியது. எதிர்வரும் மாதங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

சர்வதேச அளவில் சேவைத் தரத்தை உறுதி செய்வதற்காக Lumin அலுமினிய உற்பத்தியாளர்களை Alumex தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது மற்றும் நிர்வாகத் திறன்கள், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்த திறன் மேம்பாட்டு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறது.

“அலுமினிய உற்பத்தியாளர்கள் பல்வேறு அளவிலான கட்டுமானத் திட்டங்களை ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் கட்டுமானத் துறையில் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த சமூகம் உள்ளூர் சந்தைக்கு உயர்தர சேவைகளை வழங்க அயராது உழைத்துள்ளது, அதற்காக நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் முன்முயற்சிகள் மூலம் தொழில்துறையை மேலும் வளர்ப்பதற்கு நாங்கள் நம்புகிறோம், எங்கள் புத்தாக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமானதை மேம்படுத்துவோம்,” என்று தாதிவெல கூறினார்.

மேலும், Alumex குழுமத்தின் நீண்ட கால நிலைத்தன்மையை உள்ளடக்கிய நீண்ட கால திட்டமான Hayleys Lifecode ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட Aluexஇன் விரிவான சேவை கோப்புறை, இலங்கையின் பசுமைக் கட்டிட சபையினால் பசுமைச் சான்றிதழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலியவின் மகளுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா...

ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அதிரடி சோதனை

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை...

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்….

நாட்டின் இயற்கை செல்வங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாத்தல்,...

இஸ்ரேலின் கொடூரங்களை தட்டிக்கேட்க முடியாத கோழைத்தன அரசு – ரிஷாட் சபையில் கடும் சீற்றம்!

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து, இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஆதரிக்கும் போக்கில் செயற்படுவதை அரசாங்கம்...